படிப்படியாக தியானம் | பாகம் – 1
படி படியாக தியானம் ,
எந்த ஒரு செயலையும் ஆர்வத்தோடும் , முழு ஈடுபாட்டோடும் தொடங்கும் போது மட்டுமே அதில் நாம் வெற்றி அடைய முடியும் . இது தியானத்திற்கும் பொருந்தும் . முதலில் தியானம் செய்ய வேண்டும் எண்ணமும் , எந்த ஒரு காரணத்திற்க்காகவும் இதை கை விடாது பயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் பதிக்க வேண்டும் . ஒரு நாளில் உங்களுக்கான ஒரு குறிப்பிட்ட (1 மணி நேரம்) நேரத்தை தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள் . தினமும் அதே நேரத்தில் பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள் அகஉலகத்திற்கும் புறஉலகத்திற்கும் இருக்கும் ஒரே இணைப்பு மூச்சு மட்டுமே . அதை எப்படி கவனிப்பது என்பதே முதல் பயிற்சி .
தரையில் ஒரு விரிப்பு போட்டுகொண்டு, முதல் 15 நிமிடங்கள் உங்களுக்கு தெரிந்த எதாவது உடற்பயற்சி , யோகா செய்யவும் , பிறகு 5 நிமிடம் நிமிட ஓய்வு எடுக்கவும் . அதன் பிறகு சுகாசனத்தில் அமரவும் .கண்களை மூடிக்கொண்டு 2 நிமிடங்கள் உங்கள் மூச்சை கவனிக்க்கவும் .
பயிற்சி 1 : நாடிசுத்தி
வலது பக்க மூக்கை விரலால் அடைத்துக்கொண்டு , இடது பக்க மூக்கில் மூச்சை மெதுவாக இழுக்கவும் . பிறகு இடது பக்க மூக்கை விரலால் அடைத்துக்கொண்டு , வலது பக்கம் மூச்சை வேகமாக வெளியே விடவும் .
மூச்சை முழுதாக வெளியே விட்ட பிறகு மீண்டும் , வலது பக்கம் மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும் .பிறகு வலது பக்க மூக்கை விரலால் அடைத்துக்கொண்டு இடது பக்கம் மூச்சை வேகமாக வெளிவிடவும்.
சுழற்சியாக மேற்கண்ட பயிற்சியை குறைந்த பட்சம் 5 நிமிடம் செய்யவும் .
பயிற்சி 2 : உள்கும்பகம் ,வெளிக்கும்பகம் ,ரேசகம் , பூரகம்
எண்களை(1,2,3,..) மனதிற்குள் எண்ணிகொண்டே மூச்சை மெதுவாக ஆழமாக உள்ளிழுக்கவும் . பிறகு , மூச்சை உள்ளே இழுக்க எவ்வளவு எண்னிக்கை எடுத்து கொண்டீர்களோ அதே எண்ணிக்கையில் , இழுக்கப்பட்ட மூச்சை உள்ளேயே நிறுத்திக்கொள்ளவும் . பிறகு அதே எண்ணிக்கயை எண்ணிக்கொண்டே மூச்சை மெதுவாக வெளியே விடவும் . விட்ட பிறகு மீண்டும் அதே எண்ணிக்கையில் மூச்சை நிறுத்தவும்.
சுழற்சியாக மேற்கண்ட பயிற்சியை குறைந்த பட்சம் 15 நிமிடம் செய்யவும்.
பிறகு 5 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ளவும் .
பயிற்சி 3 : ஓம்
மூச்சை மெதுவாக ஆழமாக உள்ளே இழுக்கவும் , மூச்சை மெதுவாக வெளிய விடும் போது ஓம் என்று சொல்லிக்கொண்டே (வாயை திறக்காமல்) விடவும் . அப்போது தலையினுள் ஏற்படும் அதிர்வுகளை கவனிக்கவும் . ஓம் ஏற்படுத்தும் அதிர்வுகள் நரம்புகளில் இருக்கும் சிறு சிறு அடைப்புகளை உடைத்து இரத்தம் உடல் முழுவதும் ஒரே சீராக பாய வழி வகுக்கும்.
சுழற்சியாக மேற்கண்ட பயிற்சியை குறைந்த பட்சம் 15 நிமிடம் செய்யவும்.
பயிற்சி 4 : கவனித்தல்
உங்கள் மூக்கின் நுனியில் முழு கவனத்தையும் ,மனதையும் நிறுத்தி , மூச்சு எவ்வாறு உள்ளே செல்கிறது ,எவ்வாறு வெளியே வருகிறது என்பதை கவனிக்கவும் .அதாவது உங்கள் சுவாசத்தை நீங்களே மூன்றாவது மனிதர் கவனிக்க வேண்டும் . மூச்சு பலவிதமாக உள்ளே சென்று வருகிறது(எகா : சில சமயம் 2 துளைகளிலும் ஒரே சீராக செல்லும்,சில சமயம் ஒரு துளைக்குள் மட்டுமே சென்று வரும்.).அதை கவனிக்கும் போது நீங்கள் உணருவீர்கள் . இந்த பயிற்சி உங்கள் மனதை ஒருமுகப்படுத்தும் .
ஆரம்பத்தில் கவனிப்பது கடினமாக இருந்தாலும் , தினமும் தொடர் பயிற்சியின் மூலம் கவனிப்பது எளிதாக மாறிவிடும் .
மேற்கண்ட பயிற்சியை குறைந்த பட்சம் 15 நிமிடம் செய்யவும் .
பயிற்சி 5 :ஓய்வு
மேற்கண்ட அணைத்து பயிற்சியும் செய்து முடித்த பிறகு , மல்லாக்க படுத்துக்கொண்டு , உள்ளங்கை மேல்புறம் இருக்குமாறு வைத்துக்கொண்டு , உங்கள் உடம்பை ஆழமாக கவனிக்கவும்.
15 நிமிடம் ஓய்வு கொடுக்கவும்.
அனைத்து பயிற்சிகளும் செய்து முடித்து எழும் போது புத்துணர்வாக உணருவீர்கள் ,
மேற்கண்ட அனைத்து பயிற்சிகளும் , தியானத்திற்கான ஆரம்ப படிநிலை பயிற்சிகள் மட்டுமே .
நன்றாக விவசாயம் செய்வதற்கு எப்படி நிலத்தை பண்படுத்துவார்களோ , அது போன்று தியானத்திற்க்காகக உங்கள் உடம்பை தயார் செய்ய இந்த பயிற்ச்சிகள் உதவும்.
Follow My Blog
Get new content delivered directly to your inbox.