படிப்படியாக தியானம் | பாகம் – 2
உங்களுக்கான ஒரு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் ,
ஒரு விரிப்பை தரையில் போட்டு விட்டு,சுகாஸனத்தில் அமரவும் .
கண்களை மூடிக்கொண்டு , நன்றாக ஆழமாக மூச்சை உள்ளே இழுக்கவும். பிறகு மெதுவாக வெளியே விடவும் .குறைந்த பட்சம் ஒரு 5 நிமிடம் மேற்கண்ட பயிற்சியை செய்யவும்.பின்பு, மூச்சை நன்றாக கவனிக்கவும் . முதலில் சிரமமாக இருந்தாலும் , தொடர்ச்சியான பயற்சின் மூலம் கவனிக்க முடியும்.
பிறகு அமைதியாக உங்கள் மனதை கவனியுங்கள்,அதில் தோன்றும் எண்ணங்களை கவனியுங்கள் . நீங்கள் என்ன முடியாத அளவிற்க்கு மனதில் உள்ள புடித்த ,புடிக்காத எண்ணங்கள் அனைத்தும் குதிரை வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். மூன்றாவது மனிதரை போல் அதை கவனித்து கொண்டே இருங்கள். இது ஒரு நாளில் சாத்தியமில்லை .முதலில் சிரமமாக இருந்தாலும் , தொடர்ச்சியாக தினமும் பயிற்சி கொள்ளும் போது ஒரு கட்டத்தில் படிப்படியாக அது குறையும்.
எண்ணங்கள் படிப்படியாக குறைந்த பிறகு , ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு எண்ணத்திற்கும் இடைவெளியில் உள்ள வெறுமையை உணர முயற்சியுங்கள் . அது உங்களுக்கு மன ஆற்றலை கொடுக்கும், ஏன் என்றால் உங்கள் மனதில் உள்ள எண்ணங்கள் வெளியேறி உங்கள் உடலும், மனமும் வெறுமையாகி கரைந்து விடுவீர்கள்.
அன்றாட வாழ்வில் எந்த ஒரு செயலில் ஈடுபடும் போதும் உணர்ந்து செயல் படுங்கள் , எடுத்துக்காட்டாக காலை எழுந்து கால்களை தரையில் வைக்கும் போது அந்த பரிசத்தை உணருங்கள், முகம் கழுவும் பொது கூட குளிர்ந்த நீரோ , சுடுநீரோ அதை முழுமையாக அதன் பரிசத்தை உணர்ந்து கழுவுங்கள் . இப்படி ஒவ்வொரு செயலும் கவனத்தோடும் , உணர்வோடும் செய்யும்போது , அது பலமடங்கு சக்தியுள்ளதாக மாறும் .
இந்த நிகழ்கால உணர்வு நிலை , தேவையற்ற எண்ணங்கள் தோன்றுவதை அழித்துவிடும் . உணவு சாப்பிடும் போதுகூட , அதன் மேல் கை வைக்கும் பரிச உணர்வு , அதை சுவைக்கும் போது ஏற்படும் உணர்வு , பின்பு கைகளை கழுவும் போது ஏற்படும் உணர்வு , எல்லாவற்றையும் கவனியுங்கள் . இப்படி கவனிக்கும் போது நீங்கள் செய்யும் தேவையற்ற , உணர்வற்ற செயல்களை உணருவீர்கள் . ஏன் என்றால் நீங்கள் உணவை முழுமையாக உணர்ந்து சாப்பிடும் போது , அதன் சத்து முழுமையாக உங்களுக்கு கிடைக்கும் , உணர்வற்று சாப்பிடும் போது அது பயனற்று போகும்.
தனியச்சையான செயல்கள் உணர்வற்று இருக்கும் , எடுத்துக்காட்டாக ஒருவர் புகை புடிக்கும் உள்ளவராக இருந்தால் , புகை புடிக்கும் நேரத்தில் அதை முழுமையாக அனுபவித்து புடிக்கிறார்களா என்றால் , கண்டிபாக இல்லை, எதோ யோனையிலோ அல்லது சுற்றத்தை கவனித்திக்கொண்டே புடிப்பார்களே தவிர யாரும் அதை முழுமையாக உணரமாட்டார்கள் . அப்படி உணரும் போது அது உடலுக்கு தேவைற்றது என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றும்.
எல்லாவற்றிலும் முழுமையாக உணர்வோடு செயல்படும் போது அது உங்கள் வாழ்க்கைக்கு மறு மலர்ச்சியை கொடுக்கும். அப்படி செயல்படும் போது உங்களுக்கு எது தேவை , எது தேவையற்றது என்பதை உணருவீர்கள் . இப்படி ஒவ்வொரு செயலையும் உணர்ந்து செயல்படும்போது , அதன் பயனை பல மடங்காக உணருவீர்கள். மனம் அமைதி அடையும் , மனமும் , உடலும் புத்துணர்ச்சி அடையும் , அனைத்து பாதையும் சரியாக விளங்கும்.
முதலில் பிராணசக்தி (மூச்சு பயிற்சி) ,
இரண்டாவது மனதை ஒருமுகப்படுத்துதல் ,
மூன்றாவது உணருதல் .
படிப்படியான பயற்சியின் மூலம் இவை அனைத்தும் சாத்தியப்படும் .